“ Workshop on Creating
Jobs” - தலைப்பே கலந்து கொள்ள தூண்டியது. PRS நடத்தும் மற்ற வகுப்புகளில் இருந்து
வேறுபட்டதாக, குறிப்பிட்ட
ஒரு தலைப்பிலான வகுப்பு. மிகவும் பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில்
நம் பகுதிக்கு பயன்படாதா என்ற எண்ணம் தான் தூண்டியது.
Workshop நடந்த இடமும் கவனிக்கத் தக்க இடமாகும். அய்.ஏ.எஸ் போன்ற இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு பொது நிர்வாகம் குறித்த பயிற்சி அளிக்கும் நிறுவனம் “Indian Institute of Public Administration”. 1954-ல் ஜவகர்லால் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டு நிறுவனத்தின் வரலாற்றை கூறியது.
17 மாநிலங்களிலிருந்து 60க்கு மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து 6 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டோம். தேமுதிகவின் ச.ம.உ-க்கள் ஆரணி-பாபுமுருகவேல், கும்மிடிப்பூண்டி-சி.எச்.சேகர், தர்மபுரி-பாஸ்கர், விருத்தாசலம்-முத்துக்குமார், பா.ம.கவின் செஞ்சி-கணேஷ்குமார் உடன் நானும்.
Workshop நடந்த இடமும் கவனிக்கத் தக்க இடமாகும். அய்.ஏ.எஸ் போன்ற இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு பொது நிர்வாகம் குறித்த பயிற்சி அளிக்கும் நிறுவனம் “Indian Institute of Public Administration”. 1954-ல் ஜவகர்லால் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டு நிறுவனத்தின் வரலாற்றை கூறியது.
17 மாநிலங்களிலிருந்து 60க்கு மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து 6 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டோம். தேமுதிகவின் ச.ம.உ-க்கள் ஆரணி-பாபுமுருகவேல், கும்மிடிப்பூண்டி-சி.எச்.சேகர்,
ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய அரசின் பல்வேறு துறை நிபுணர்கள், தனியார்
துறையை சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துகளை
வழங்கினார்கள்.
திட்டக்குழுவின் “Institute of Applied Manpower Research” , “ Centre for Policy Research”, “National Skill Development Corporation ( அரசு மற்றும் தனியார் கூட்டு நிறுவனம்)”, போன்ற அரசு துறை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பேச வந்த போதுதான் மத்திய அரசின் பல திட்டங்கள் யாருக்கும் தெரியாமலே இருப்பது தெரிய வந்தது.
திட்டக்குழு உறுப்பினர் அருண் மைரா வந்திருந்து “ புதிய உற்பத்திக் கொள்கை” குறித்து பேசினார். அதே போல ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணை செயலாளர் Dr.சந்தோஷ் மேத்யூ “கிராமப்பகுதிகளில் திறன் வளர்ப்பு” என்ற தலைப்பில் பேசினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் DG ஷிகார் அகர்வால் “திறவின் வளர்ப்பில் அரசின் முன்முயற்சி” குறித்து பேசினார்.
இப்படி தனிமனிதனின் திறனை மேம்படுத்துவதன் மூலம் வேலை வாய்ப்புகளை எளிதாக அனைவரும் பெறுவதறகான வாய்ப்புகள் குறித்தும், புதிய தொழில் வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டது.
எல்லாம் சரி, பயன் என்ன அப்படிங்கறது உங்க கேள்வி ? என்னுதும் அதே கேள்விதாங்க.
பல புதிய தொடர்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய நிறுவனங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் நடைமுறைப் படுத்தி பார்த்தால் தான் தெரியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக