பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 10 நவம்பர், 2013

காலேஜ்ல படிக்கும் போது அவ்ளோ பேசுவாங்க, கடலன்னும் சொல்லலாம்...

கல்லூரியில் கடைசி வரிசைக்கே உரித்தான குணம் கமெண்ட் பாஸ் செய்வது. அதில் மெல்ல முன்னேற்றம் அடைந்து மூன்றாம் வருடத்தில், பிட் பேப்பர்களில் கமெண்ட் எழுதி சர்க்குலேஷன் ஆனது. இது தான் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்களுக்கு முன்னோடி என நினைக்கிறேன். 

முன் வரிசையிலும் ஸ்டேடசர்கள் இருப்பார்கள், ஆனால் காகிதத்தில் வராது, வாய் வார்த்தைகள் தான். ஆனால் அவர்கள் பெண்களுக்கு மட்டுமே தெரியப்படுத்துவார்கள். பெண்களுக்கு பிடித்தாற் போல் இருக்கும் போலும். கடலைன்னும் சொல்லலாம்.

இன்னொரு குருப் உண்டு. அவர்களும் பெண்களுக்காகவே கமெண்ட், ஸ்டேடஸ் போடுபவர்கள். ஆனால் இவர்களை கண்டால் பெண்கள் தெரித்து ஓடுவார்கள். காரணம் இது வம்பு கோஷ்டி.

பெண்கள் குறித்து பேசுவோர் தவிர்த்து இன்னும் பல குருப்கள் உண்டு. IIT, IIM, foreign studies, கிரிக்கெட் என அது பல வகைப்படும். இதில் சினிமா குறித்து பேசுவோரே மெஜாரிட்டி. ஆனால் அரசியல் குறித்துப் பேசுவோர் மைனாரிட்டி. 


இதல்லாமல் 'கல்ச்சுரல்ஸ்'களில் பங்கேற்று கலக்கியோர் பலர் உண்டு. பல்வேறு சங்கங்களில் இணைந்து தனித் திறமை காட்டியோர் உண்டு. கல்வி சார்ந்த நிகழ்வுகளில் பேசி பேர் பெற்றோர் உண்டு.


பொறியியலில் 'மின்னியல் மற்றும் மின்ணணுவியல்' (electrical and electronics) படித்ததால் நிறைய பேர் அய்.டி துறையில் உள்ளனர். இவர்கள் யாரும் பெரிய அளவில் சமூக வலைதளங்களுக்கு வரவில்லை.


எல்லோருமே ஸ்மார்ட் ஃபோன் வைத்திருக்கும் வாய்ப்பு அதிகம். குறைந்தபட்சம் இணைய இணைப்பு இருக்க செய்யும். ஆனால் யாரும் பெரிய அளவில் இயங்கவில்லை.

கல்லூரியில் அதிகம் பேசியோரில் ஒருவர் கூட இங்கு முகநூலில் பேசக் காணோம். நானும் இன்னொருவரும் தான் இங்கு இருக்கிறோம். கல்லூரியில் அவரும் நானும் நண்பர்கள். அவர் முன் இரண்டாம் வரிசையாளர். நான் கடைசிக்கு முன் பென்ச். அவர் உமர் பாரூக்.

அங்கு அமைதியாக இருந்த அவர் இங்கு அரசியல் ஸ்டேடஸ்கள் போடுகிறார். நக்கலும் நையாண்டியுமாக அதே சமயத்தில் யாரையும் புண்படுத்தாத ஸ்டேடஸ்கள்.

மற்றவங்களும் வந்தா கல்லூரி காலம் திரும்பும்....



                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக