பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 5 நவம்பர், 2013

பழைய கடிதங்கள், இனிய நினைவுகள் ....

கடந்த காலங்கள் எப்போதும் நினைத்து ரசிக்கத் தக்கவை தான். பழைய பாடல்கள், பழைய கடிதங்கள், பழைய புகைப்படங்கள், பழைய நட்புகள் இப்படி...

                   

தீபாவளியன்று பழைய கட்டுரை கிடைத்ததை போல சில புகைப்படங்களும், கடிதங்களும் கிடைத்தன. அதில் ஒரு கடிதம் கர்நாடக மாநிலம் மங்களுரிலிருந்து, சதீஷ்ஷெட்டி என்ற நண்பரிடம் இருந்து 1993ல் வந்தது.

மலரும் நினைவுகள் சுழன்றன. 1991, பெங்களூரில் பணியாற்றிய காலம், அங்கு இருந்த நண்பர்களில் ஒருவர் சதீஷ். மங்களூர் மாவட்டம் உடுப்பி வட்டத்திலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்.

92ல் பெங்களூரிலிருந்து வந்த பிறகு இவரிடம் கடிதத் தொடர்பு தான். அவர் பணியாற்றிய இடங்கள் தொடர்ந்து மாறியதால் தொலைபேசி எண்கள் சரிவரவில்லை. அது செல்பேசி வராத காலம்.

93-ஆம் ஆண்டு கடிதத்தோடு தொடர்பு அறுந்துவிட்டது. இடையில் ஒரு முறை பெங்களூரு சென்ற போது துழாவினேன், அகப்படவில்லை. பழையக் கடிதத்தை பார்த்தவுடன் தேடினால் என்ற எண்ணம் ஏற்பட்டது. இணையத்தில் அலசினேன், கிடைக்கவில்லை.

காலை முகநூலில் தேடினேன் சதீஷை கண்டுபிடிக்க முடியவில்லை. இவரோடு விலாஸ் ஹெக்டே என்ற இன்னொரு நண்பரும் எனக்கு பெங்களுரில் நெருக்கமானவர். சரி இவரைத் தேடுவோம் என தேடினேன்.

விலாஸ் புரொபைல் சிக்கியது. வயது கூடியிருந்தாலும் புகைப்படத்தை அடையாளம் காணுவது எளிதாகவே இருந்தது. ஆனால் மார்ச்சிற்கு பிறகு அப்டேட் இல்லை. இருந்தாலும் பரவாயில்லை என தனிச் செய்தி அனுப்பினேன். பதில் இல்லை.

புரொபைலில் மெயில் ஐடியும் இல்லை. ஆனால் ஒரு இணைப்பில் அவரது நிறுவனத்தின் இணைய முகவரி கிடைத்தது. அதில் இருந்த சர்வீஸ் ஐடியை பிடித்து மெயில் அனுப்பி, அவரது தனி ஐடியை பிடித்தேன், இரண்டாவது நாள். செல்லில் பேசினோம். 21 ஆண்டுகள் இடைவெளி. டெக்னாலஜிக்கு நன்றி.

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஒன்று துவங்கி நன்கு வளர்ந்திருக்கிறார். பெங்களூரில் இருக்கிறார். நீண்ட உரையாடல். பழைய நினைவுகள். சதீஷுடன் இவருக்கு தொடர்பு அறுந்து விட்டது. நான் நினைவுப் படுத்தியவுடன் அவரும் தேடத் துவங்கியிருக்கிறார். சதீஷை தேடும் பணி தொடர்கிறது

# பழைய நட்புகளை புதுப்பியுங்கள், இனிய நினைவுகள் திரும்பட்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக