பிரபலமான இடுகைகள்

புதன், 13 நவம்பர், 2013

வசந்தபவன் தாக்கு பிடிச்சி நிக்கிறாங்க.....

ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது....

சின்ன வயசிலேருந்து சென்னை வர்றப்ப எல்லாம் பார்த்த, சாப்பிட்ட ஹோட்டல் வசந்தபவன். அதிலும் குறிப்பா எக்மோர் ரயில் நிலையம் முன்னாடி இருக்கிற வசந்தபவன்.

அப்போ இருந்த புகழ் பெற்ற ஹோட்டல்கள் பல இப்ப கால ஓட்டத்தில காணாம போயிடுச்சி. இம்பாலா இப்படி நிறைய. ஆனா வசந்தபவன் தாக்கு பிடிச்சி நிக்கிறாங்க.


                               

ஆனா இவங்களுக்கு பின்னாடி வந்த சரவணபவன் இந்த போடு போறாங்களே, இவ்வளவு விரிவாக்கம் ஆயிடுச்சே, உலகம் எங்கும் கிளை துவக்குறாங்களே, வசந்தபவன் ஏன் செய்யல அப்படின்னு சந்தேகம்.

சரவணபவன் உள்ள நுழைஞ்சாலே சாப்பிட வர்றவங்களோட வேலை செய்யறவங்களே பெரிய கூட்டம் நிற்பாங்க. அவங்கள சூப்பர்வைஸ் பண்றதுக்கு ஆட்கள், அவங்கள மேனேஜ் செய்ய ஆட்கள். யுனிபார்ம், நீட்னெஸ், இண்டீரியர், என்வரன்மெண்ட் இப்படி கலக்கற சரவணபவன் முன்னாடி இவங்க நிக்க முடியலன்னு நினைச்சேன்.

                            

ஆனா அதுக்கான முக்கிய காரணம் இன்னைக்கு தான் தெரிஞ்சுது...

சட்டமன்றம் அவசரக் கூட்டம் முடிஞ்சு டிரெயின பிடிக்க எக்மோர் வந்தேன். வசந்தபவன் கண்ணுல பட்டுது. ரொம்ப நாள் ஆச்சே, இங்க சாப்பிட்டுன்னு உள்ளே நுழைந்தேன்.

ஒரு பிளேட் இட்லியும், ரவா தோசையும் சொன்னேன். இண்டீரியர்லாம் இல்லாம பழைய ஸ்டைல்லேயே ஹோட்டல் இருந்தது. ஆனா சுத்தத்திற்கு குறைவு இல்ல.

இட்லி வந்தது. சர்வர் தேங்காய் சட்னியும், சாம்பாரும் ஊற்றினார். ஊற்றிட்டு வாளிய அங்கேயே வச்சிட்டு போனார். திரும்பி ஒரு கொத்தோடு வந்தார். ஒரு கார சட்னி மாதிரி ஒன்ன வச்சாரு.

அப்புறம் தான் அதிர்ச்சி. வெங்காய சட்னி வச்சாரு, கொஞ்சம் தாராளமாவே. அந்த கொத்தையும் டேபிள்ளேயே வச்சிட்டு போயிட்டாரு. வெங்காய சட்னி நல்லாவே இருந்தது. இன்னும் கொஞ்சம் போட்டுகிட்டேன்.

ரவா தோசைய வச்சிட்டு சட்னிய தூக்கிட்டு போயிடுவாருன்னு பார்த்தேன். எடுக்கல. நம்ம இஷ்டத்துக்கு போட்டுக்க விட்டுட்டாங்க.

வெங்காய சட்னிய இப்படி வச்சா, எப்படி சார் லாபம் கட்டுபடியாகும் ? அதான் நிறைய பிரான்ச் போட முடியல. கொஞ்சம் சரவணபவன் போய் கத்துக்குங்க, எப்படி சட்னி குடுக்கனும்னு. மில்லிகிராம் கூட ஜாஸ்தியும் இருக்காது, குறையவும் செய்யாது.

# எம்பெருமான் என்ன சொன்னார், சட்னிய அளவா வைக்க சொன்னாரா ?



                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக