நிகழ்ச்சி துவங்கியது. முதல் நிகழ்ச்சி , வந்திருப்போரின் நலனில் அக்கறையோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆம், மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் உரை. இயற்கை உணவுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறவரின் உரை.
46 வயதை கடந்த, கடக்கிற பழைய மாணவர்கள் இருக்கிறக் கூட்டம். இது தான் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுகிற முக்கியமான காலகட்டம். எனவே, இது தான் முக்கிய செய்தியாக இருக்க வேண்டுமென ராம்ஸ் முதல் நிகழ்ச்சியாக உடல் நலம் குறித்த அமைத்தார்.
"ஆறாம் திணை", "ஏழாம் சுவை", "நலம்" ஆகிய உடல் நலம் சார்ந்த நூல்களின் ஆசிரியர் ஆற்றிய உரையின் தலைப்பு "நலம்". மிகவும் எளிமையாக, விளக்கமாக, மனதில் தைக்கும் வகையில் அமைந்தது உரை.
"நூடுல்ஸ் தீமைகளை பலகாலமாக எடுத்துக் கூறி வந்தோம். இப்போது தான் விழிப்பு வந்திருக்கிறது. இதே போல தான் மிச்சம் இருக்கிற ஃபாஸ்ட்புட்களை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறோம். இதற்கும் முடிவு வர வேண்டும்".
"வெளி நாட்டு உணவு வகைகளை நாம் ஏன் உண்ண வேண்டும். நமது சிறு தானியங்கள் தான் சிறந்த உணவு. வரகு, சாமை, தினை, கேழ்வரகு போன்ற தானியங்கள் தான் உடலுக்கு வலு சேர்ப்பது. தீட்டாத அரிசியை உண்ணுங்கள்".
"வெள்ளைகளை தவிர்த்திடுங்கள். உப்பு, சர்க்கரை, பால், முட்டை போன்ற வெள்ளை உணவுகளை உண்ணாதீர்கள். பிராய்லர் கோழியும் இப்போது இந்தப் பட்டியலில் சேர்ந்துக் கொண்டு இருக்கிறது.
ஒரு முறை பிராய்லர் கோழி சாப்பிடுவது, பதினைந்து நாட்களுக்கு ஆண்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதற்கு சமம். நாட்டுக் கோழியையும் இதே முறையில் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள்.
அதே போல பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளை ஒதுக்குங்கள். பேக்கிங் செய்யும் உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க, அதனுடன் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மதுவை ஒதுக்குங்கள், தலைமுறையே வீணாகிக் கொண்டிருக்கிறது".
ஒரு பேராசிரியரின் கேட்கும் மாணவர்கள் போல எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக பெண்கள் பக்கம் பலத்த ஆதரவு. இந்த ஆதரவின் காரணமாக மறு நாள் காலையும் அவரது பேச்சுக்கு நேரம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆண்கள் பக்கமும் ஆதரவு, காரணம் தங்கள் பேச்சைக் கேட்காத பிள்ளைகள் இவரது பேச்சைக் கேட்டாவது, ஜங்க் உணவை ஒதுக்கட்டும் என.
அடுத்து பேசியவர்...
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக