தெற்கிலிருந்து கிளம்புகிறது சூரியன்.
அரை மணி நேர முதலமைச்சரின் ஆட்சியில், தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அந்த இருளை விரட்டும் சூரியன் தான் தெற்கில் இருந்து கிளம்புகிறது.
இந்த சூரியனுக்கு பயணம் புதிதல்ல. பயணம் தான் வாழ்க்கையே. இயற்கையாய் சூரியனை பூமிப் பந்து சுற்றுகிறது. இங்கே இந்த சூரியன் தமிழகத்தை அசராமல் சுற்றுகிறது.
தமிழகத்தை இண்டு இடுக்கு விடாமல் தம் காலால் அளந்த தலைவர்கள் தந்தை பெரியாரும், தலைவர் கலைஞரும். அவர்களை இன்று சத்தமில்லாமல் முந்திக் கொண்டிருப்பவர் இந்த சூரியன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இவரது பயணம் இளமையிலேயே துவங்கி விட்டது. தொண்டராக பயணத்தை துவங்கியவர், பயணித்துப் பயணித்தே இன்று தலைவராக பரிமளித்துக் கொண்டிருக்கிறார்.
தொண்டராய் துவங்கிய பயணம் அடுத்தக் கட்டம் இளைஞர் அணி நிர்வாகியாக தொடர்ந்தது, இன்று கழகப் பொருளாளராக தொடர்கிறது. மேயராக துவங்கி துணை முதல்வராக பயணித்தார் தமிழகமெங்கும், எதிர் கட்சித் தலைவராக தொடர்கிறார்.
இந்த ஆட்சியின் துவக்கத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட கழக நிர்வாகிகளை சந்திக்க சிறை, சிறையாக பயணித்தார். இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க மாவட்டம், மாவட்டமாக பயணித்தார்.
ஈழத் தமிழருக்காக அய்.நா.மன்றத்திற்கு பயணித்தார். பொது மக்கள் பிரச்சினைக்காக போராட்ட பயணம் தொடர்ந்தார். மதுவிலக்கு போராட்ட மாணவர்களை சந்திக்க புழலுக்கு பயணித்தார்.
மாவட்டம், மாவட்டமாக கழக நிர்வாகிகளை சந்தித்தார். 'வாங்க பேசலாம்' என தொகுதி மக்களை சந்தித்தார். நவீன யுகத்து சிற்பிகள் மாணவர்களை கடந்த வாரம் திருவண்ணாமலையில் சந்தித்தார்.
மதுரையில் "மக்கள் ஓரணி, கேள்வி கேட்கும் பேரணி" என மக்களை திரட்டினார். அடுத்து கடலூரில் ,"துருபிடித்துக் கிடக்கும் தமிழ்நாட்டிற்காக நீதி கேட்கும் பேரணி" நடத்தினார். திருப்பூரில்," முடியட்டும் காட்டாட்சி, விடியட்டும் தமிழகம்" என முரசறிவித்தார்.
இதோ இந்த நிமிடம் கிளம்பி விட்டார், "விடியல் மீட்பு பயணம்", "நமக்கு நாமே" என நம் ஒளிரும் சூரியன், மக்களை சந்திக்க.
வயல் ஓரங்களில், தெரு முனைகளில், டீக்கடைகளில், கடைத் தெருக்களில், சாலை மருங்கில், சந்தைகளில் என மக்கள் திரளும் இடமெல்லாம் நாடி வருகிறார் இந்த நீதிக் கேட்கும் தலைவன்.
45 நாட்கள், 234 தொகுதிகளையும் வலம் வரப் போகிறார் இந்த "விடியல் மீட்பு நாயகன்".
# விடியும் இந்த சூரியனால். விடியல் மீட்கப்படும், இந்தத் தலைவனால் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக