பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

அது தான் திமுக

"அண்ணன் சிவகங்கை வர்றீங்களா?"
"ஆமாம் வந்துக்கிட்டு இருக்கேன்"
"அண்ணா, நாங்க மறுவீடுக்காக சிலைமான் வந்துட்டோம்"
"அப்படியா, நான் அங்கே வந்திடறேன். நான் வருவதை யார் சொன்னது?"
"சிங்கப்பூர்லிருந்து கணேசன் சேகர் அண்ணன் சொன்னார்"

இது தான் சிங்கை சிங்கங்கள். நான் திருச்சியில் சகோதரர் அருள் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி விசாரித்து விட்டு கிளம்பி அரை மணி நேரத்தில் இந்த அழைப்பு, அது சகோதரர் சிலம்பிடம் இருந்து. அவ்வளவு ஒருங்கிணைப்பு சிங்கை சிங்கங்களுக்குள்.

அண்ணன் கணேசன் சேகர், சகோதரர் அருள், சகோதரர் சிலம்பரசன்  ஆகியோர் சிங்கப்பூரில் பணி புரிபவர்கள். நான் அங்கிருந்த இரண்டு நாட்களும் என்னோடு இருந்தவர்கள்.

சிங்கப்பூரில் ஒரு வலுவான குழுவாக செயல்படும் கழகத் தோழர்கள். அங்கே எப்போதும் தொடர்பில் இருப்பவர்கள். அதே போல இங்கேயும். என் பயணச் செய்தி, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சிலைமானில் இருந்த சிலம்புக்கு வந்து விட்டது.

சிலம்பு திருமண விழாவில் அண்ணன்கள் பெரிய.கருப்பன், தங்கம்.தென்னரசு, பெரியண்ணன்.அரசு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  அன்று மாவட்டத்தில் பல்வேறு திருமணங்கள் இருந்ததால் என்னால் செல்ல இயலவில்லை.

சிலைமான் மதுரைக்கு அருகில் இருக்கும் ஊர். மணமகள் ஊர். சிலம்புக்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்திவிட்டு உரையாடிக் கொண்டிருந்தோம்.

சிலம்புவின் தந்தையார் வேறு இயக்கத்தில் மாவட்ட செயலாளர் என அண்ணன் தினகரன் அரசு இட்டிருந்த நிலைத்தகவல் நினைவுக்கு வந்தது. அது குறித்து கேட்டேன்.

சிலம்பு சொன்னார், "ஆமாம் அண்ணா. அப்பா ஒரு சமுதாய இயக்கத்தில் மாவட்ட செயலாளர்".

வழக்கமாக அப்பாக்கள்  திராவிட இயக்கத்தில் இருப்பார்கள், மகன்கள் உணர்வு வேகத்தில் சமூக இயக்கத்தில் இருப்பார்கள். அதுவும் வெளிநாட்டில் இருப்போர் என்றால்  சற்று கூடுதல் உணர்வோடு.

சிலம்பு விஷயத்தில் அப்படியே தலைகீழ்.

"அப்புறம் எப்படி கழகத் தோழர்கள் பெயரோடு அழைப்பிதழ் அச்சடிக்க, அப்பா ஒப்புக் கொண்டார்?"
"நான் சின்ன வயசில் இருந்தே இப்படித்தான், தளபதி பிரியன். அப்பா  ஒன்றும் சொல்ல மாட்டார். திருமண நிகழ்விற்கு அவர் கட்சிக் கொடியை அவர் கட்டி இருந்தார். நான் கழகக் கொடியைக் கட்டி இருந்தேன்".

"அவர் இருக்கும் கட்சியின் கூட்டணிக் கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்கள், என்ன திமுக கொடி என்று கேட்டிருக்கிறார்கள். பையன் அந்தக் கட்சி என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு வியப்பான விஷயம், சிங்கப்பூரில் இருக்கும் மகன் திருமணத்திற்கு எப்படி இத்தனை திமுக முக்கிய நிர்வாகிகள் வந்தார்கள் என்பது தான்".

அது தானே திமுக.

சமுதாய இயக்கத்தில் அப்பா மாவட்ட செயலாளர். சிங்கப்பூரில் பணிபுரியும் மகன் திமுக. அவர் காத்திருந்து திருமண செய்துக் கொண்ட தேதி, தளபதி அவர்களின் திருமணத் தேதி. எனக்கு போக வர ஆறுமணி நேர பயணம். களைப்பே இல்லை, மகிழ்ச்சி தான்.

# வாழ்க சிலம்பரசன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக