பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

உயர்ந்த உள்ளம் உயர்க !

அந்த பெயரே அவர் வசம் இழுத்தது. கொக்கரக்கோ சௌம்யன். சௌம்யன் ஈர்த்ததற்கு. காரணம் அது பேரறிஞர் அண்ணா கொண்டிருந்த புனைப் பெயர்களில் ஒன்று.

அவர், அவரது சகோதரர் அபி அப்பா என்கிற தொல்காப்பியன் ஆகியோர் முகநூல் மூலம் தான் அறிமுகம் என்றாலும், நேரில் பழகிய உணர்வு அப்போதே. நேரில் இன்னும் வலுவானது.

சௌம்யன் ஒரு தொழிலதிபர். உணவு பொருட்கள் உற்பத்தி செய்தார். அவருக்கு முன்பே அவரது தயாரிப்பு எனக்கு அறிமுகம். "ரமணாஸ் சத்து மாவு".

மயிலாடுதுறை எனது வாழ்விணையர் பிறந்து வளர்ந்த ஊர். அங்கு செல்லும் போது தான் 'ரமணாஸ்' விளம்பரங்களை உள்ளூர் சேனல்களில் பார்த்தேன். அங்கே சாப்பிட்டும் உள்ளேன்.

பிறகு 10 ஆண்டுகள் கழித்து தான் முகநூல் வாயிலாக கழக நிலைத் தகவல்கள் மூலம் தொடர்பு ஏற்பட்டது. சமீபத்தில் மயிலாடுதுறையில் உள்ள அவரது தொழிலகத்திற்கு சென்றிருந்தேன்.

விரிவாக்கப் பணிகள் முழு வீச்சில் நடைப் பெற்றுக் கொண்டிருந்தன. அண்ணன் சௌம்யன் அவர்களும், அண்ணியார் சித்ரா அவர்களும் சுற்றிக் காட்டினார்கள்.

நான் சிறுவயதில் ரைஸ்மில்லுக்கு கோதுமை மாவு, மிளகாய் தூள் அரைக்க செல்லும் போது பார்த்த இயந்திரங்கள் அங்கே இருந்தன. மேலே தானியங்களை கொட்டினால், இயந்திரத்தை இயக்கி, அரைத்து, கீழே துணிப்பை வழியாக மாவு வரும்.

அதற்கு மாற்றாக இப்போது தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்படுகின்றன. இனி இயந்திரமே லோட் செய்து, உலர்த்தி, சலித்து, அரைத்து மாவாக கொடுத்து விடும்.

செய்தி நவீன மயமாக்கியதல்ல. இதற்கு முன்பாக இந்தப் பழைய இயந்திரங்களை கொண்டே உணவுப் பொருட்களை தயாரித்து சிங்கப்பூர் வரை சந்தைப் படுத்தியது தான். அவ்வளவு உழைப்பு.

அதைவிட முக்கியமானது அங்கு பணியாற்றும் 60க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

எங்களுக்கு டீ எடுத்து வரச் சொன்னார் அண்ணன் சௌம்யன். "எங்கிருந்து வரும்?" என்று கேட்டேன். "கேண்டீனிலிருந்து" என்றார். அங்கேயே சென்று சாப்பிடுவோம் என்றேன். மாடிக்கு போனோம்.

கேண்டீன் வரலாற்றை சொன்னார். வேலை செய்யும் ஒரு பெண் அரிசியை சாப்பிடுவதாக செய்தி. ஏனென்று பார்த்தால் உணவு எடுத்து வருவதில்லை. அவ்வளவு வறுமை. உடனே இலவசமாக மதிய உணவு கொடுக்க கேண்டீன் துவங்கப்பட்டது. காலைக்கும் விரிவுப் படுத்தப்பட்டது. சில நாட்கள் அசைவமும் உண்டு.

தொழிலாளர்கள் நலனை முதலில் கவனித்தவர், இப்போது தான் தொழில் நலனை கவனித்திருக்கிறார். நவீனப் படுத்தி இருக்கிறார்.

நவீனமாக்கப்பட்ட தொழிலகம் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. டாக்டர் தளபதி அவர்களின் மைத்துனர். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இயக்கம் நடத்தும் தமிழ் பற்றாளர்.

அண்ணன் தங்கம்.தென்னரசு, ஏ.கே.எஸ்.விஜயன், பெரியவர் அறந்தாங்கி ராஜன், குத்தாலம் அன்பழகன் ஆகியோரோடு நானும் கலந்து கொண்டு வாழ்த்தினோம்.

# உள்ளத்தை போல் உயர்வு. இன்னும் உயர்க , வளர்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக