பிரபலமான இடுகைகள்

திங்கள், 4 ஜனவரி, 2016

தெறிக்க விடலாமா : நாஞ்சில்

நெறியாளர் ஆதவன் : வணக்கம் சார்
நாஞ்சில் சம்பத் : வணக்கம், வணக்கம்.

ஆதவன்  : உங்கள் பொறுப்பை எடுத்து விட்டார்களாமே ?
சம்பத் : அதனால் இப்ப என்ன குடி மூழ்கிப் போச்சு ?

ஆதவன் : பதவி போனதற்காக வருத்தப்படுறீங்களா ?
சம்பத்  : ஒப்பாரி கேட்கிறதென கல்யாணங்களை நிறுத்த முடியாது.

ஆதவன் :முதல்வரை சந்தித்து விளக்கம் அளிப்பீர்களா ?
சம்பத் :  ஆடி பிறை போல எப்போதாவது வீதிக்கு வருகிற முதலமைச்சர் அம்மா

ஆதவன்  : உங்கள் பதவி ஏன் பறி போனது ?
சம்பத் :  வெள்ளத்தை வேடிக்கை பார்க்க போனவன் அடித்துப் போய் விட்டது போல...

ஆதவன் : இந்த அறிவிப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
சம்பத் : அம்மா இதை தந்திரமாக அறிவித்திருக்கிறார்.

ஆதவன் : என்ன தந்திரம் ?
சம்பத் : அம்மா வந்து சொல்வாங்க சார்...

ஆதவன் : அம்மாவை சந்திக்க முடியவில்லையே ?
சம்பத் : சந்திக்க முடியல, என்ன பண்ணனுங்கறீங்க ?

ஆதவன் : சரி, வெள்ளத்திற்கு என்ன காரணம் ?
சம்பத் : சார், இது எங்க ஆட்சி

ஆதவன் : செம்பரம்பாக்கம் திறக்க ஏன் லேட்டானது ?
சம்பத் : அம்மா வரட்டும்னு காத்திருந்தோம்

ஆதவன் : அப்போ செம்பரம்பாக்கம் ஏரிய திறந்து விட்டது யார்?
சம்பத் : சார் இது என்ன கேள்வி? தொட வேண்டியவங்க தொட்டா தான் துலங்கும். தொட்டாங்க...

ஆதவன் : 500 பேர் செத்து போனாங்களே
சம்பத் : நாங்க பட்டத்து யானைங்க

ஆதவன் : மக்களுக்கு முதல்வர் ஆறுதல் கூற போகலையே
சம்பத் : ஆள் போகாம மக்கள் மூச்சு திணறிப் போயிட்டாங்களா ?

ஆதவன் : மக்கள் கோபமாயிருக்காங்களே
சம்பத் : எல்லோரும் இனி தான் அம்மாவை அங்கீகரிக்கப் போறாங்க சார்

ஆதவன் : சரி இந்த நேரத்தில் முதல்வர் பொதுக்குழு கூட்டினாங்களே
சம்பத் : சார், கிரீஸ் நாடு பிச்சை எடுக்குது. இது ஒரு விஷயமா ?

ஆதவன் : அதுக்கு இவ்ளோ ஆடம்பரம் தேவையா?
சம்பத் : சார், அம்மா ஸ்டைலே வேற

ஆதவன் : பொதுக்குழு விளம்பரத்தால் இடைஞ்சல் ஏற்பட்டதை தட்டிக் கேட்ட சமூக ஆர்வலர்களை அதிமுகவினர்  தாக்கினாங்களே
சம்பத் : ஒரு உயிர் துடிப்புள்ள இயக்கம் அப்படி தான் இயங்க முடியும்

ஆதவன் : நிதி வாங்கறேன்னு பணக்காரங்கள மட்டும் முதல்வர் சந்திக்கிறாங்களே?
சம்பத் : ஆமாம், வசதிக்கு ஏற்ப சந்திக்கிறாங்க, இயங்கறாங்க...

ஆதவன் : சரி, இந்த ஆட்சியில் பணப்புழக்கம் இல்லைன்னு சொல்றாங்களே
சம்பத் : உலகம் பூரா கடன்ங்க, வளர்ந்த நாடுகளே பிச்சை எடுக்குதுங்க. நீங்களும் எடுங்களேன்

ஆதவன் : நாடாளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்தீங்கன்னு குற்றச்சாட்டு இருக்கு. சட்டமன்ற தேர்தலுக்கு?
சம்பத் : எந்தெந்த நேரத்தில் எடுக்கனும்னு அம்மாவுக்கு தெரியுங்க, எடுப்பாங்க.

ஆதவன் : இப்படி பேட்டிக் கொடுக்கறீங்களே. எப்படி உங்கள கட்சியில சேர்த்தாங்க
சம்பத் : நான் ஒரு familiar figureனு

ஆதவன் : அப்ப உங்களாலே தான் முதல்வருக்கு பெருமையா
சம்பத் : ஆமாங்க, அவருக்கு அடையாளம் கொடுத்ததே நான் தாங்க

ஆதவன் : என்ன அடையாளம்?
சம்பத் : அவர் தனியறையில பேசறத, அவர் மைண்ட் வாய்ஸ, பேட்டியா கொடுக்கறது நான் தான் சார்

ஆதவன் :  இது உங்களுக்கு இன்னும் பிரச்சினையாகதா ?
சம்பத் : சார், அம்மாவ மக்களுக்கு தெரியாதா?

ஆதவன் : மக்கள் ஆட்சி மாற்றத்த விரும்புவது போல தெரியுதே?
சம்பத் : அப்படியா, அம்மா யாருக்கும் சுமையா இருக்க கூடாதுன்னு நினைக்கிறவங்க

ஆதவன் : நீங்க மக்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?
சம்பத் : அரசியல் பொது இலக்கணம் சொல்றேன், கேட்டுக்குங்க. "வீழ்த்த வேண்டியவர்களை எந்த ஆயுதம் எடுத்தாவது வீழ்த்த வேண்டும்"

ஆதவன் : இப்போ உங்க நாக்கு தான் பெரிய ஆயுதமா தோணுது சார்
சம்பத் : என்னை புகழ்வது எனக்கு பிடிக்காது

ஆதவன் : உண்மையிலேயே என்ன பேசறோம்னு தெரிஞ்சு தான் சமீபகாலமா பேட்டிக் கொடுக்கறீங்களா ?

சம்பத் : தென்திசை குமரி கடல் முதல் வடதிசை வேங்கட மலை வரை அறிந்தவன் இந்த சம்பத். தொல்காப்பியம் முதல் நேற்றைய தனுஷ் படப் பாட்டு வரை தெரிந்தவன் இந்த சம்பத். சோழர்கால வரலாறு முதல் இந்த டாஸ்மாக் கால வரலாறு வரை புரிந்தவன் இந்த சம்பத்....

ஆதவன் : கொஞ்சம் முடிங்க பாஸ்
சம்பத் : இரிங்க, இரிங்க. தெறிக்க விடலாம்....

தெறித்து ஒடுகிறார் ஆதவன்

('கொஞ்சம் நடிங்க பாஸ்' புகழ் ஆதவன் அரசியல் பேட்டி எடுக்க ஆசைப்பட்டு, ஒரு வார காலமாக தொடர்ந்து நாஞ்சில் பேட்டிகளை பார்த்ததில் ஏற்பட்ட கெட்ட கனவு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக